அரிசி, கோதுமைக்கு தானியங்களுக்கு பதிலாக குளூட்டன் அல்லாத சிறுதானியங்களை டய்ட்டில் சேர்த்துக் கொள்வது வியக்கத் தக்க வகையில் நன்மை பயக்கும். கம்பில் அதிக அளவிலான நார்ச்சத்து, புரதம் மட்டுமல்லாது பல்வேறு விட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. 100 கிராம் கம்பில் சுமார் 15 கிராம் அளவிற்கு புரதம் நிறைந்துள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதோடு கொழுப்பு மிக குறைவு.
கம்பை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள்
உடல் பருமன்
நார்சத்து மற்றும் புரதம் அதிகம் இருப்பதால், கொண்ட கம்பு உடல் பருமனை குறைப்பதிலும், கொலஸ்ட்ராலை எரிப்பதிலும் மிகவும் நன்மை பயக்கும்.
கொலஸ்ட்ரால்
கம்பில் புரதம் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) குறைத்து நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட கம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
நரம்பு மண்டல ஆரோக்கியம்
கம்பில் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த மிகவும் அவசியமான லெசித்தின் அதிக அளவு உள்ளது. மேலும், கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை கூர்மைபடுத்த உதவும்.
யூரிக் அமில பிரச்சனை
கம்பு இயற்கையான டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. உடலில் பியூரின் அளவு அதிகமாக இருந்தால் யூரிக் அமிலம் அதிகரிக்கும். தினையை உட்கொள்வதால் பியூரின் அளவு குறைகிறது.
எலும்பு ஆரோக்கியம்
கம்பில் எலும்புகளை வலிமையாக்க தேவையான கல்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன. இது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. இது தவிர, கம்பு எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவி, அதன் வலிமையையும் அதிகரிக்கிறது.
இரத்த சர்க்கரை அளவு
கம்பின் கிளைசெமிக் இண்டெக்ஸ் என்னும் GI அளவு அரிசி கோதுமையை விட மிகக் குறைவாக உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இருக்கும். கம்பில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
செரிமான ஆரோக்கியம்
நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக்க உதவுகிறது. இது உடலில் இருந்து நச்சுப் பொருட்களையும் நீக்குகிறதுமலச்சிக்கல், வாயு மற்றும் பிற வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. நார்ச்சத்து இருப்பதால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் வயிற்றை நன்கு சுத்தம் செய்கிறது.
கம்பை, பலவிதங்களிலும் சமைக்கலாம். இட்லி, தோசை, சப்பாத்தி பனியாரம் என விதவிதமாய் சமைக்கலாம் என்றாலும், பாரம்பரிய உணவான, கம்பமங்கூழ், கம்பு புட்டு மிகவும் சுவையானவை. உடலுக்கு மிகவும் நன்மை பயப்பவை.