இந்திய அரசால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காவே இந்த உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் இலங்கை இடையே 75 ஆண்டுகால நீண்டகால இராஜதந்திர உறவை அடிப்படையாகக் கொண்டே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பொதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே விநியோகிக்கப்பட உள்ளன.