பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்தவிஜயபால மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் குறித்த சந்திப்பு கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் கலந்து கொண்டிருந்தார்.
க்ளீன் சிறீலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் பொலிசாரின் நலன்புரி விடயங்கள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி ஆராயும் நோக்குடன் வருகை தந்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.