Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பிரமந்தனாறு மாதிரிக் கிராம அபிவிருத்தித் திட்டத்தின் முன்னாயத்தக் கலந்துரையாடல்!

ஜனவரி 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடமாகாண ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவுக்கமைவாக 2025ம் ஆண்டு அபிவிருத்தி திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து அபிவிருத்தி தேவைப்பாடுகளுள்ள ஒரு கிராம சேவகர் பிரிவினை மாதிரிக் கிராமமாக தெரிவு செய்து குறித்த கிராமத்தினை அனைத்து விடயங்களிலும் முன்மாதிரியான ஒரு கிராமமாக முன்னேற்றும் செயற்றிட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் பிரமந்தனாறு கிராம அலுவலகர் பிரிவினை மாதிரிக் கிராமமாக தெரிவுசெய்துள்ள நிலையில், குறித்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று(02.01.2025) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் தலைமையில், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் பங்கேற்புடன் காலை 9.00மணிக்கு பிரமந்தனாறு கிராம அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது குறித்த கிராமத்தின் தேவைப்பாடுகளாக கல்வி, நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, விவசாயம், கழிவு வாய்க்கால், சுகாதாரம், குடிநீர், மைதான அபிவிருத்தி, உற்பத்திகளை சந்தைப்படுத்தல், சட்டவிரோத செயற்பாடுகள், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இவ்வாறான விடயங்களை உள்ளடக்கிய வகையில் பிரமந்தனாறு மாதிரிக் கிராம திட்டம் தயாரிக்கப்படும்.

இங்கு அபிவிருத்தி செயற்பாடுகள் மட்டுமன்றி சகல விடயங்களும் பூர்த்தி செய்து குறித்த திட்டம் 31.06.2025ம் திகதிக்கு முன் முடிவுறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளருமான மோகனபவன், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மத்திய மற்றும் மாகாண ஆளுகைக்குட்பட்ட பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

முந்தைய செய்தி ஆனந்தவிஜயபால மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சந்திப்பு.
அடுத்த செய்தி முட்டை வெச்சு இப்படி சால்னா செய்யுங்க.. இட்லி, தோசை, சப்பாத்திக்கு செம சூப்பரா இருக்கும்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் விபத்து பலர் காயம்!

செப்டம்பர் 27, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் புதிய அரசியல் கட்சி கூட்டொன்று உருவாக்கப்பட்டுள்ளது …

மார்ச் 20, 2025
இலங்கை

சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை!

செப்டம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு!

ஜூலை 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?