Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

மலேசிய விமானத்தை தேடும் புதிய முயற்சிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல்.

டிசம்பர் 21, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பத்து ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் புதிய முயற்சிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதலளித்துள்ளது.

மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH370 என்ற விமானம் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங்கை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது நடுவானில் மாயமானது.

இறுதியில் விமானம் கடலில் விழுந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், உடைந்த விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பல்வேறு அமைப்புகள், அரசுகள் அதனை தேடும் முயற்சியில் ஈடுப்பட்டு தோல்வியைத் தழுவின.

பத்து ஆண்டுகள் கழித்தும் இன்னும் அது எங்கே? என்ற மர்மம் முடிவுக்கு வராத நிலையில், தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ’ஒஷன் இன்ஃபிண்ட்டி’ எனும் கடல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அதனை மீண்டும் தேட முன்வந்ததற்கு மலேசிய அரசு ஒப்புதலளித்துள்ளது.

இதுகுறித்து நேற்று (டிச.20) மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி லூக் கூறுகையில், மாயமான விமானத்தைத் தேட அந்நிறுவனத்துடன் 70 மில்லியன் டாலர் மதீப்பீட்டில் ’நோ ஃபைண்ட், நோ ஃபீஸ்’ ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்நிறுவனம் மறைந்த விமானத்தின் பாகங்கள் ஏதேனும் கண்டுப்பிடித்தால் மட்டுமே பணம் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சில கோட்பாடுகள் குறித்து இருத்தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதன்பின்னர் இந்த தேடுதல் பணி அடுத்தாண்டு (2025) உறுதி செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

முன்னதாக, ‘ஒஷன் இன்ஃபிண்ட்டி’ நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டில் அந்த விமானத்தின் பாகங்களை மூன்று மாதங்கள் தேடி தோல்வியுற்றது.

மேலும், சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து சுமார் 150 மில்லியன் டொலர் செலவில் 2 ஆண்டுகளாக நடத்திய தேடலும் எந்தவொரு முன்னேற்றமும் இன்றி கடந்த 2017 ஆம் ஆண்டில் முடிவுப்பெற்றது.

 

முந்தைய செய்தி மும்பையில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு.
அடுத்த செய்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் நோர்தம்ரன் பகுதியில் சிறப்பாக இடம் பெற்ற தமிழர் விளையாட்டு விழா.

அக்டோபர் 1, 2024
உலகம்

உத்தரகண்ட் மாநிலத்தில் மண்சரிவு -நால்வர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 5, 2025
உலகம்

பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில் திருட்டு!

அக்டோபர் 21, 2025
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த ஈரான்

ஏப்ரல் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?