அடுத்த ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதன்படி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இலங்கையிலிருந்து இரு வீரர்களை தங்களோடு இணைத்துக் கொண்டது. இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான வனிந்து ஹசரங்க மற்றும் தீக்ஷன ஆகியோரே இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட வீரர்களாவர்
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினால் வனிந்து ஹசரங்க 5.25 கோடி இந்திய ரூபாய்க்கும், தீக்ஷன 4.40 கோடி இந்திய ரூபாய்க்கும் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.