பிரதமர் மோடிக்கு நைஜீரியா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருது வழங்கப்பட்டது.
நைஜீரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “Gcon” விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது கடந்த 1969 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அளிக்கப்பட்டது. ராணி எலிசபெத்துக்கு அடுத்தபடியாக இந்த விருது பெறும் இரண்டாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
அதேநேரம், பிரதமர் நரேந்திர மோடி பெறும் 17 ஆவது சர்வதேச விருது இதுவாகும். மூன்று நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா சென்றடைந்துள்ள நிலையில், அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.