பிரதமராகப் பதவியேற்ற பின்னர் பெய்ஜிங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் சீனப் பிரதமர் லீ கியாங்கை சந்தித்து கலந்துரையாடியபோது இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் மூன்று ஆண்டு திட்டத்திலும் அவர் கைச்சாத்திட்டுள்ளார்.
சீனாவின் பெல்ட் எண்ட் ரோட் திட்டத்திலிருந்து கடந்த ஆண்டு இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தமது நாட்டை நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.