நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களில் 400ற்கும் அதிகமான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புத்தளம், யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் மொத்தம் 1,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் 325 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
