Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறது இந்தியா – நாளை போர்க்கால ஒத்திகை

மே 6, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சு நேற்று (05) உத்தரவிட்டது.

மேலும், இந்த ஒத்திகையை நாளை நடத்துமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டதாக மத்திய அரசின் உயா்நிலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடா்பாக பாகிஸ்தானையொட்டிய சா்வதேச எல்லையை இணைக்கும் இந்திய எல்லை மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், லடாக், ஜம்மு – காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய உள்துறையில் இருந்து சனிக்கிழமை மாலையில் அனுப்பப்பட்டுள்ள குறிப்பில், பாதுகாப்பு ஒத்திகையின்போது என்னன்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்தல்; அண்டை நாட்டில் இருந்து தாக்குதல் நடந்தால் பொதுமக்களை பாதுகாப்பது எப்படி என சிவில் பாதுகாப்பு அமைப்புகள், பொதுமக்கள், மாணவா்கள், தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்கள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு உரிய பயிற்சி அளித்தல்; தாக்குதலின் விளைவாக மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடங்கினால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து மாநிலங்களை உள்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இராணுவம், பாதுகாப்பு தளவாடங்கள் உள்ள இடங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், அணுஉலை மற்றும் ஈனுலை மையங்கள், உள்ளிட்ட முக்கிய இடங்கள் அந்நிய படைகளின் இலக்காகலாம் என்பதால் அவை அந்நிய ராடாரில் இருந்து தெரியாமல் தடுக்க தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மறைத்தல்

தாக்குதல் நடப்பதாகவோ தாக்குதல் நடந்தாலோ அங்குள்ளவா்களை பாதுகாப்பாக வெளியேற்றத் திட்டம் 1,2,3 ஆகியவற்றை தயாரித்தல்; மக்களை பத்திரமான இடத்துக்கு அழைத்துச்செல்லுதல், அதற்கு தேவையான தளபாட வசதிகள், மருத்துவமனை வசதிகள் உள்ளிட்டவற்றை தயாா்நிலையில் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளை பாதுகாப்பு ஒத்திகையின் அங்கமாக செயல்படுத்துமாறு மாநிலங்களை உள்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

முந்தைய செய்தி தேர்தல் வாக்களிப்பு வீதம் குறையும் – ரணில் எதிர்வுகூறல்
அடுத்த செய்தி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – மேலும் இரு மாணவர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

ஜூன் 19, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனேடிய அரசினால் இடை நிறுத்தப்பட்ட புலம்பெயர்தல் திட்டம்!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மே 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்ட இருவர் கைது!

ஆகஸ்ட் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?