Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஒட்டுசுட்டானில் பெண்ணை தாக்கிய நபர் கைது…

ஏப்ரல் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (03.04.2025) ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று பொலிசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.

இந் நிலையில் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய குறித்தநபர் ஒட்டுசுட்டான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச்சேர்ந்த இருபெண்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து, பெண்ணொருவரின் கணவர், மற்றைய பெண்ணை வீதியில்வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந் நிலையில் இவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், குறித்த பெண்ணைத் தாக்கிய நபர் தலைமறைவாகியிருந்தார்.

இத்தகையசூழலில் குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பெண்ணை தாக்கிய நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அப்பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று குறித்த இடத்திற்கு விரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பெண்ணை கொடூரமாகத் தாக்கிய குறித்த நபர் உடனடியாகக் கைதுசெய்யப்படவேண்டுமென பொலிசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய 24மணிநேரத்திற்குள் குறித்த நபர் கைதுசெய்யப்படுவார் என ஒட்டுசுட்டான் பொலிசார், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடமும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் உத்தரவாதமளித்திருந்தனர்.

அந்தவகையில் குறித்த நபர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வட்டுவாகலில் பதற்றநிலை – ஒருவர் கைவிலங்குடன் தப்பியோட்டம்…
அடுத்த செய்தி இராணுவத்தினர் வசமிருந்த 15 ஏக்கர் காணி பிரதேச செயலாளரிடம் கையளிப்பு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது!

செப்டம்பர் 26, 2025
இலங்கை

யாழ் அரியாலை பகுதியில் போராட்டம் முன்னெடுப்பு!

அக்டோபர் 8, 2025
இலங்கை

அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 19வது ஆண்டு நினைவு தினம்!

டிசம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 180 முறைப்பாடுகள்!

மார்ச் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?