எதிர் கட்சி தலைவர் பியர் பொலிவ்ரே, தான் மட்டுமே , டிரம்பையும் அவரது கிண்டல்களையும் எதிர்கொள்ள கூடிய கடினமான ஒருவர் என தெரிவித்துள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை எதிர்கொள்ள மிகவும் பொருத்தமான “கடுமையானவர்” தான் என தெரிவித்துள்ளார். அதனால்தான் அமெரிக்கத் அதிபர் கனடாவில் ஒரு பழமைவாதியை விட “ஒரு லிபரல் கட்சியினரை சமாளிப்பது ” எளிது என தான் நினைப்பதாகக் தெரிவித்தார் எனவும் பியர் பொலிவேர் தெரிவித்துள்ளார்
இன்று ஒன்ராறியோவின் சட்பரியில் செய்தியாளர்களை சந்தித்த போதே பியர் பொய்லிவ்ர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
பியர் பொலிவ்ரே மற்றும் அவரது முக்கிய எதிரியான பிரதமர் மார்க் கார்னி இருவரும் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் டிரம்ப் எதிர்ப்பு வேட்பாளராக தங்களைக் காட்டிக் கொள்ளத் தொடங்கியதால் இந்தக் கருத்து வந்துள்ளது.
இந்தத் தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதியின் தண்டனை விதிக்கும் வரிகள் மற்றும் இணைப்புவாத அவதூறுகள் பற்றிய பேச்சுக்கள் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்களை பிரதமர் மார்க் கார்னிக்கு ஒப்புதல் அளிப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி லிபரல் கட்சியினர் அதிகாரத்தில் இருக்க விரும்புகிறார் ” என்பதற்கான அறிகுறியாகவும் தந்து கருத்துக்களை கூறினார்எனவும் பியர் பொலிவேர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி “பலவீனமான, சமரசம் செய்யப்பட்ட மற்றும் முரண்பட்ட தலைமையை விரும்புகிறார்..எனவும் . அதனால்தான் அவர் நேற்று மார்க் கார்னியை ஆதரித்தார்” எனவும் பியர் பொய்லிவ்ர் தெரிவித்தார்.
டிரம்ப் தனது கருத்துக்களில் பியர் பொய்லிவ்ரே மற்றும் மார்க் கார்னியின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று ஃபாக்ஸ் செய்தி சேவைக்கு அமெரிக்கா அதிபர் அளித்த நேர்காணலில் அமெரிக்காவின் சில “எதிரிகளை” விட கனடா மீது தனது வரிகள் மற்றும் அச்சுறுத்தல்களில் அவர் ஏன் கடுமையாக நடந்து கொண்டார் என்பது குறித்து டிரம்ப் வலியுறுத்தி இருந்தார்.
கனடா அமெரிக்காவை “ஏமாற்றுகிறது” மற்றும் “குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது” என ஜனாதிபதி விளக்காமல் கூறினார், மேலும் அமெரிக்கர்கள் இந்த நாட்டிற்கு ஆண்டுக்கு $200 பில்லியன் அளவுக்கு “மானியம்” வழங்குவதாக தனது தவறான கூற்றுக்களை மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் .
கனடா குறித்த டிரம்பின் கடுமையான பேச்சு ஆளும் லிபரல் கட்சியை உற்சாகப்படுத்தியுள்ளது எனவும் , கன்சர்வேடிவ்களின் தேர்தல் வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இது அமெரிக்காவிற்கு ஒரு இழப்பாகக் கருதப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
