Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
Uncategorizedஉலகம்

ராமேஸ்வர மீனவர்கள் இன்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டம்.

பிப்ரவரி 23, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்களையும் ஐந்து விசைப்படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மீனவர்களின் கைது நடவடிக்கை கண்டித்து இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 450 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் இலங்கை மன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஐந்து விசைப்படகையும் அதிலிருந்த 32 மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு பின்னர் மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இன்று கைது செய்யப்பட்ட 32 மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

மீனவர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 700க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன் 10,000 மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்த தொடர் வேலை நிறுத்தம் காரணமாக தினசரி சுமார் ஒரு கோடி ரூபாய் அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக மீனவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று நடவடிக்கை எடுக்கா விட்டால் ஓரிரு நாட்களில் தமிழக கடலோர மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்த இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி கிளிநொச்சி மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்.
அடுத்த செய்தி உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் நிர்வாக கலந்துரையாடல்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பாகிஸ்தானைச் சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை

டிசம்பர் 20, 2024
உலகம்

ஆஸ்திரேலியா அரசின் புதிய சட்டம்-டிசம்பர் 10 முதல் அமுலாக்கம்!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஜப்பானில் வெள்ளப்பெருக்கு அபாயம் ;30,000 பேர் வெளியேற்றம்

செப்டம்பர் 21, 2024
அண்மைய செய்திகள்உலகம்

ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று தென்படும்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?