Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சமரசமின்றிப் போராடிய துணிச்சலான ஆளுமையை இழந்துவிட்டோம் – அமைச்சர் சந்திரசேகர்

நவம்பர் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், தமது கொள்கைகளுக்காகவும் இறுதிவரை சமரசமின்றிப் போராடிய சிரேஷ்ட அரசியல்வாதியான வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“அரசியல் ரீதியாக எமக்கிடையே வெவ்வேறு நிலைப்பாடுகளும் மாறுபட்ட கருத்துக்களும் இருந்தபோதிலும், தனிப்பட்ட ரீதியில் அவருடன் நான் கொண்டிருந்த நட்பும் புரிந்துணர்வும் மிகவும் ஆழமானது. அண்மையில் அவரை நேரில் சந்தித்து உரையாடிய தருணங்கள் இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளன. அந்தச் சந்திப்பின் போதும், வழமை போலவே மிகவும் உற்சாகத்துடனும், தமிழ் மக்களின் எதிர்காலம் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்த ஆழ்ந்த சிந்தனையுடனும் அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

தாம் கொண்ட கொள்கையில் எவ்விதத் தளர்வுமின்றி, துணிச்சலுடன் குரல் கொடுக்கும் அவரது பண்பு என்றும் போற்றுதற்குரியது. அன்னாரது அரசியல் பயணம் மிகவும் நீண்டதும் போராட்டங்கள் நிறைந்ததுமாகும். ஆரம்பகாலப் போராட்டக் களத்திலிருந்து ஜனநாயக அரசியல் நீரோட்டம் வரை, தமது மக்களின் குரலாக ஒலிப்பதற்கு அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.

பாராளுமன்ற உறுப்பினராகவும், வடமாகாண சபை உறுப்பினராகவும், இறுதிவரை வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராகவும் அவர் ஆற்றிய மக்கள் பணிகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். விமர்சனங்களுக்கு அஞ்சாமல், தாம் சரி என நம்பிய விடயங்களுக்காக இறுதிவரை உறுதியுடன் நின்ற ஒரு துணிச்சலான ஆளுமையை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.”

அன்னாரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வல்வெட்டித்துறை மக்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாகவும், அன்னாரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி காணிகளை விடுவிக்கக் கோரி 22ஆவது வாரமாக போராட்டம்!
அடுத்த செய்தி யாழில் தந்தை, மகன் உயிரிழந்த விபத்தில் ஆள் மாறாட்டம் அம்பலம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

செப்டம்பர் 18, 2026
இலங்கை

இலங்கை மின்சார சபையின் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

செப்டம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிராண்ட்பாஸ் விபத்தில் பெண் ஒருவர் உயிரழப்பு!

மே 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில்.தனியார் தங்குமிடத்தில் யுவதி குளிப்பதை காணொளி எடுத்தவர் கைது….

மே 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?