இலங்கையில் கட்டாயமான SLS 591 தரச்சான்றிதழ் முத்திரை இல்லாமல் பதப்படுத்தப்பட்ட மீன் டின்களை விற்பனைக்காக வைத்திருந்த சம்பவம் தொடர்பில், ஐந்து பிரதிவாதிகளுக்கு மொத்தம் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாலிககந்த நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, SLS 591 சான்றிதழ் முத்திரை இல்லாத 185 கிராம் எடையுடைய 87 மீன் டின்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 32 டின்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், ஏனைய 55 டின்கள் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து பல்பொருள் அங்காடி நிர்வாகத்தினர் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு 90 ஆயிரம் ரூபாவும், மீன் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாகத்தினருக்கு 20 ஆயிரம் ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
