கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா நோய்த்தொற்றினால் இதுவரை 4 ஆயிரத்து 887 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நோய்த்தொற்று அண்டை நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. கென்யாவில் கொங்கோ வழியாகப் பயணித்த ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டிலும் சுகாதாரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உகாண்டா உள்ளிட்ட பிராந்திய நாடுகளிலும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நோயாளிகளை அடையாளம் காணுதல், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணித்தல் மற்றும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

