Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அனோஜனுக்குக் கருணை மன்னிப்பு வழங்கக் கோரிய சனத் ஜெயசூரிய!

அக்டோபர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்குக் கருணை மன்னிப்பு வழங்குமாறு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் வீரருமான சனத் ஜெயசூரிய சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள சனத் ஜெயசூரிய, மதம் மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்து இலங்கையர்களும் இந்த மனிதநேயக் கோரிக்கைக்கு ஆதரவாக ஒன்றிணைந்து நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையர்கள் என்ற வகையில், எமது மதம் அல்லது இனத்தைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் ஒன்றாக நிற்கிறோம். எமது சக இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மனிதநேய அடிப்படையில் கருணை வழங்குமாறு சவூதி அரேபிய இராச்சியத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பதிவில் சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் சமூக வலைத்தளக் கணக்குகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனத் ஜெயசூரியவின் இந்த வேண்டுகோள், சிவராசா அனோஜனுக்கு கருணை மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இலங்கையின் விளையாட்டுத் துறையிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளதை வெளிப்படுத்துகிறது.

கல்முனையைச் சேர்ந்த இலங்கைப் புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜன், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தண்டனைக்கு எதிராக சவூதி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் குழுவினர், சவூதி அரேபிய வழக்கறிஞர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

அதேவேளை, சிவராசா அனோஜனுக்குக் கருணை மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை அரசாங்கமும் தூதரக ரீதியிலான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தண்ணீர் இன்றி தவிக்கும் உலகின் பெரிய நகரங்கள்

ஜனவரி 24, 2026
1
இலங்கை

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்.

மார்ச் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

ஜனவரி 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு பிரதான வீதியில் லொறியுடன் மோதி சிறுவன் உயிரிழப்பு!

நவம்பர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?