Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை!

அக்டோபர் 11, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி சி. அ. யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளன.

பிரபல அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி.அ. யோதிலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை தனது 70ஆவது வயதியில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் எட்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற சத்திர சிகிச்சையை தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மறுநாள் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அன்னாரது உடலுக்கு அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது இறுதி கிரியைகள் நாளைய தினம் திங்கட்கிழமை (12.10.2026) காலை 10 மணியளவில், குப்பிழான் தெற்கு, வீரமனை பகுதியில் அமைந்துள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது புகழுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குப்பிழான் காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் பிறந்த சி.அ. யோதிலிங்கம், தொழில் நிமித்தம் நீண்டகாலம் கொழும்பில் வசித்ததுடன், பின்னர் உரும்பிராயிலும் வசித்து வந்தார்.

அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர், கல்வியியலாளர் எனப் பல்துறை ஆற்றல்களைக் கொண்டிருந்த அவர், அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

1970ஆம் ஆண்டு அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பகால உறுப்பினராகப் பங்கெடுத்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சூழலிலும், ஈழத்து அரசியல் களத்திலும் ‘ரமணி’ எனும் பெயரில் தீவிரமாக இயங்கி வந்தார்.

தமிழர் தேசத்தின் அரசியல் விடுதலைக்காக தனது 16ஆவது வயதிலேயே செயற்படத் தொடங்கிய அவர், வாழ்வின் இறுதி வரை கொள்கை மாறாது உறுதியுடன் பயணித்ததுடன், தமிழ்த்தேசிய அரசியல் வெளியில் தனக்கெனத் தனித்துவமான அடையாளத்தையும் உருவாக்கினார்.

ஈழத்து அரசியல் மற்றும் தமிழ்த்தேசியம் தொடர்பான பல தசாப்தகால ஆய்வுகளில் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும், பல முக்கிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

மலையக மக்கள் தொடர்பான கொள்கை விவாதங்களை முன்னெடுத்ததுடன், மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

முந்தைய செய்தி மாங்குளத்தில் 2ஆம் லெப். மாலதியின் நினைவேந்தல்
அடுத்த செய்தி வலிகாமம் வடக்கில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுணதீவில் விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஏப்ரல் 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை வருகின்றார் ஓதுவார் சுவாமிநாதன்

ஜூன் 18, 2026
இலங்கை

மன்னாரில் சுகயீன போராட்டத்தை அறிவித்த கிராம அலுவலர்கள்

டிசம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?