Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஹரக் கட்டா’வின் உயிருக்கு அச்சுறுத்தல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

செப்டம்பர் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெலிசர சிறப்புத் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிந்தகா விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’வின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அவரது தந்தை நெல்சன் மெர்வின் விக்ரமரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மகன் தங்காலை பழைய சிறைச்சாலையிலிருந்து வெலிசர சிறப்புத் தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாக தந்தை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ‘ஹரக் கட்டா’வின் எதிரிகளாகக் குறிப்பிடப்படும் சிலரும் அதே தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 22ஆம் திகதி ‘ஹரக் கட்டா’வுக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதலில் பத்மே காயமடைந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தனது மகனைச் சந்திப்பதற்கு குடும்பத்தினருக்கோ அல்லது அவரது சட்டத்தரணிகளுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனையடுத்து, வெலிசர சிறப்புத் தடுப்பு மையத்தில் தனது மகனின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவரைச் சந்திப்பதற்கான உரிமையும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய செய்தி World Cycling Championships -Montréal மற்றும் South Shore பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு
அடுத்த செய்தி தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் – தர்மலிங்கம் சுரேஸ்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- இருவர் காயம்!

டிசம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். சர்வதேச தாதியர் தினம்

மே 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் அடக்கு முறையில் ஈடுபடுவதாக நாமல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 10, 2025
இலங்கை

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காட்டுங்கள் ஜே.வி.பி.க்கு பொதுஜன பெரமுன சவால்!

செப்டம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?