Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்!

செப்டம்பர் 24, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு  சித்தாண்டியில் கணவனின் தாயாரை சந்திக்க சென்ற மனைவியின் கழுத்தில் கத்தியால்  குத்தி கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் இன்று  (24) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரான தங்கராசா பிரதீபா என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது…..

மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கூலித் தொழிலாளியான மூத்தவன் வாசன் என்பவர் தங்கராசா பிரதீபா என்ற பெண்ணை திருமணம் முடித்து 10 , மற்றும் 7 வயதில் மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான கணவன் தினமும்  மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு சென்று மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான இன்று மனைவியின் கையடக்க தொலைபேசியை கணவன் எடுத்துச் சென்று அதனை விற்பனை செய்து பணத்தை எடுத்து அதற்கு  மதுபானம் வாங்கி குடித்துவிட்டு வீடு வந்துள்ளார்.

இதையடுத்து கணவன் மனைவிக்கிடையே நீண்ட நேரம் தகராறு இடம்பெற்று வந்துள்ள நிலையில்  மனைவி வீட்டில் இருந்து வெளியேறி சித்தாண்டி கலைமகள் வீதியில் உள்ள கணவனின் தாயாரான மாமியாரிடம் கணவனை பற்றி முறையிடுவதற்கு அங்கு சென்றுள்ள நிலையில்  மனைவியை பின் தொடர்ந்து சென்ற கணவர் தனது தாயார் வீட்டில் வைத்து  மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியதையடுத்து அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதையடுத்து பொலிஸ் அவசர சேவை 119 அறிவித்ததையடுத்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்தாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த நபர்  கடந்த மாதம் 24ம் திகதி போதை பொருளுடன் கைது செய்ததுடன் மது போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நீதவானின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி ‘டோரதி’ திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியீடு!
அடுத்த செய்தி மெட்ரோ விநியோக மைய ஊழியர்களின் 5 மாத வேலைநிறுத்தம் நிறைவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ரத்மலான சைமா உள்ளிட்ட மூவரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

ஆகஸ்ட் 11, 2026
இலங்கை

முல்லைத்தீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி – ஊர் மக்களால் முற்றுகை

மார்ச் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

டிசம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம்

மே 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?