பாடசாலையில் இருந்து மகளை ஏற்றி சென்ற தந்தை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில் , பாடசாலை மாணவியான மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை பூங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது
பாடசாலை முடிந்து மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, வீடு நோக்கி தந்தை பயணித்துக்கொண்டிந்த வேளை, பூங்கன்குளம் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளை, புகையிரத்தத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து தந்தை சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மகள் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


