Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

இசைஞானி தொடக்கி வைத்த ‘மஞ்சணத்தி’

செப்டம்பர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கெனத் தனித்துவமான இடத்தைப் பிடித்த இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மஞ்சணத்தி’ எனத் தலைப்பிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது.

பூஜையுடன் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இசைஞானி இளையராஜா திரைப்படத்தின் முதல் காட்சிக்கு கிளாப் அடித்து படப்பிடிப்பை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாரி செல்வராஜ், “இன்று முதல் மஞ்சணத்தியின் தினங்களை தொடங்கி வைத்த எங்கள் இசைஞானிக்கு என்றைக்குமான எங்கள் நன்றியும் அன்பும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா மாரி இணைந்து தங்களது ‘நவ்வி ஸ்டூடியோஸ்’ (Navvi Studios) தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ‘பரியேறும் பெருமாள்’ கதிர் நடிக்க, முன்னணி நடிகைகளான பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பூர்ணியா ரவி, விது மற்றும் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் உள்ளிட்டப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

தொடர்ந்து அழுத்தமான சமூகக் கதைக் களங்களைக் கொண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகும் இந்த மஞ்சணத்தி திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி அபிஷன் ஜீவிந்த் – சிவராஜ்குமார் இணையும் ‘பிக்காசோ’
அடுத்த செய்தி சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ரூ.260 கோடி வசூல் சாதனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

சாய் அபயங்கரின் இசையில் ரதிமா பாடல்

ஆகஸ்ட் 19, 2026
சினிமா

திரையுலகில் ஒரு யுகத்தின் முடிவு: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

ஆகஸ்ட் 21, 2026
சினிமா

முதல்முறையாக சின்னத்திரையில் நடுவராகக் களம் இறங்கும் ஏ.ஆர்.ரகுமான்!

ஆகஸ்ட் 17, 2026
சினிமா

கார் விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா!

அக்டோபர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?