Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

செப்டம்பர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் வட்டம் ஒத்தையால் கிராமத்தில் செயல்பட்டு வரும் ‘சின்னதம்பி பட்டாசு ஆலையில்’ வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக உராய்வு காரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆலையின் கட்டடம் சேதமடைந்ததோடு, அங்கு பணியில் இருந்த மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான மாடசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதலமைச்சர், உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த மாடசாமியின் குடும்பத்தினரின் துயரைப் போக்கும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நான்கு லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அடுத்த செய்தி மோகன்லால் நடிப்பில் ‘ஆபரேஷன் கங்கா’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

வெங்காய விலை உயர்வு : கிலோ ரூ.35-க்கு விற்க மத்திய அரசு நடவடிக்கை

ஆகஸ்ட் 28, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

கரூர் சம்பவத்திற்கான நினைவேந்தலை நடத்த விஜய் திட்டம்

அக்டோபர் 15, 2025
இந்தியா

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!

ஆகஸ்ட் 20, 2026
இந்தியா

மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும்: பா.ஜ.க. எம்.பி. கோரிக்கை!

ஆகஸ்ட் 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?