யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனில் முழுமையாக சவுக்கங்காடு ஏரிந்து நாசமாக்கும் அபாய நிலை காணப்படுவதாகவும் எனவே விரைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சவுக்கம் காட்டை பாதுகாப்பதற்கு உரிய தரப்புக்குள் உதவுமாறு பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திரு அகஸ்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது கிராம மக்கள் நலன் விரும்பிகள் பலர் தீயை அணைக்கின்ற முயற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற போதும் தீ விளாசி எரிவதால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

