Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆகஸ்ட் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நெடுந்தீவுக்கான படகு சேவைகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதனை சீராக்க வேண்டும் என கோரி உள்ளூர் சுற்றுலா சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட தரப்பினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் வீதி அதிகார சபைக்கு சொந்தமான படகு சேவையில் ஈடுபடுபவர்கள், பலரை ஏற்றாது விட்டு செல்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் , இன்றைய தினம் புதன்கிழமை காலை நெடுந்தீவில் சுற்றுலாவிகள் உள்ளிட்ட பலரை, நெடுந்தீவில் இருந்து அழைத்து வராது படகுகள் புறப்பட்டுள்ளது.

இதனால் பலர் யாழ்ப்பாணம் திரும்ப முடியாது நிர்க்கதியானார்கள்.

படகு சேவை வழங்குநர்களின் இத்தகைய செயற்பாடுகளினால் நெடுந்தீவுக்கான சுற்றுலாத்துறை பாதிப்பை எதிர்கொள்வதாகவும், படகு சேவையில் உள்ள குறைபாடுகளால், சுற்றுலாவிகள் நெடுந்தீவு வராதமையால் தமது சுற்றுலா சேவைகள் பெரும் பாதிப்புக்களை சந்திக்கின்றன.

குறிப்பாக தங்குமிட சேவைகளை பெற சுற்றுலாவிகள் முற்பதிவுகளை மேற்கொண்டு நெடுந்தீவு வருவதற்காக யாழ்ப்பாணத்தில், இருந்து குறிகட்டுவான் வரை வந்த பின்னர் , குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கான படகு சேவைகள் தடைப்பட்டால், அவர்கள் திரும்பி செல்கின்றனர்.

அதனால் முற்பதிவுகள் இரத்து செய்யப்பட்டு அவர்களின் முற்பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதனால் பெரும் வருமான இழப்பை எதிர்கொள்கின்றோம்.

எனவே நெடுந்தீவின் சுற்றுலாத்துறை மேம்படுத்த வேண்டும் என அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அரசாங்கம் நெடுந்தீவுக்கான படகு சேவைகளை உரிய முறையில் மேம்படுத்தி தரவேண்டும் என கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, மீண்டும் நெடுந்தீவு செல்வதற்காக சென்ற நெடுந்தீவை சேர்ந்தவர்கள் வீதி அதிகார சபையினரால் நடத்தப்படும் படகு சேவை கிடைக்காதமையால், தனியாருக்கு சொந்தமான சிறிய படகில் நெடுந்தீவு நோக்கி பயணித்த போது, படகு கவிழ்ந்ததில் 10 பேரும் கடலில் விழுந்த நிலையில் உயிராபத்து, இன்றி அவர்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி
அடுத்த செய்தி பரந்தன் பகுதியில் பொலிசாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார் – தூதுவர் உறுதி

ஜனவரி 14, 2026
இலங்கை

தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை.

பிப்ரவரி 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற சிறை அதிகாரி கைது

செப்டம்பர் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று மனித என்பு கூட்டு தொகுதி

மே 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?