Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஆகஸ்ட் 11, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை 11.30 மணியளவில் மடு திருத்தலத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

மேலும் பிரதேச செயலாளர்கள்,நானாட்டான் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், இராணுவம், கடற்படை, பொலிஸ் அதிகாரிகள், வைத்தியர்கள், சுகாதார துறையினர், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மடு திருத்தலத்தில் ஆவணி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தர உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் வருகை தரும் மக்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு முன்னெடுக்க வேண்டிய அவசிய தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக மடு திருவிழா காலப்பகுதியில் பாடசாலைகள் விடுமுறை என்பதால் இலட்சக்கணக்கான மக்கள் தற்போது மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.இந்த நிலையில் திருவிழா நாட்களில் மக்களின் வருகை அதிகரிக்கக்கூடும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து,சுகாதாரம்,மருத்துவம்,தங்கும்இடம்,குடி நீர்,மின்சாரம் மற்றும் பாதுகாப்பு விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் மடு திருத்தலத்திற்கு திருவிழா காலப்பகுதியில் வருகை தரும் ஒருங்கிணைக்கப்பட்ட திருடர்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பிச்சையெடுப்போர் தொடர்பாகவும் விசேட கவனமெடுத்து அதனைத் தடுப்பதற்குரிய விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் தற்போது நாட்டில் டெங்கு நோய் நிலைமை ஒரு நெருக்கடியான நிலையில் இருப்பதால் தற்போது வெளி மாவட்டங்களில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவதால் இங்கே எவ்விதமான டெங்கு நோயும் பரவாமல் இருப்பதற்குரிய ஏற்பாடுகளும் சுகாதாரத்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்து ஆராயப்பட்டது.

இதனைவிட பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில், நியாயமான கட்டுப்பாட்டு விலையில் நியாயமான நிறையுடன் விற்பனை செய்வதற்குரிய ஏற்பாடுகளும், அதை கண்காணிப்பதற்கு உரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டமை குறித்து ஆராயப்பட்டது.

மேலும் மடு புனித பிரதேசம் என்பதால், இந்தப் பிரதேசத்துக்குள் மதுபானங்கள் அல்லது போதை பொருட்கள் எடுத்து வருவதை முற்றாக தவிர்க்கப் பட்டிருக்கிறது.

அதை மீறுவோர் மீது உடனடியாக சட்ட ஏற்பாடுகள் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் உரிய தரப்பினர் குறித்த விடயங்கள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12 ஆம் திகதியிலிருந்து இங்கே நடமாடும் (சுற்றுச்சல்) நீதிமன்றம் நிறுவப்பட்டு, அதன் ஊடாக சட்டத்தை மீறுவோர், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துகின்ற வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.

மடு அன்னையின் ஆவணித் திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் தொடர்ந்து மாலை நவநாள் இடம்பெற்று வருகின்றது.14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும்,15 ஆம் திகதி காலை திருவிழா திருப்பலியும் ஆயர்கள் தலைமையில் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பொலன்னறுவையில் தனியர் அதிசொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
அடுத்த செய்தி மட்டக்களப்பில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலி அறுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

நைஜீரியாவில் தடகள வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து!

ஜூன் 1, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

அகற்றப்படும் சர்ச்சையை ஏற்படுத்திய மொன்றியல் நகர மண்டப வரவேற்புப் பலகை!

மார்ச் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அமுலுக்கு வரவுள்ள புதிய பேருந்து கட்டண திருத்தம்

ஜூலை 1, 2026
இலங்கை

நயினாதீவு படகு சேவையில் நேர மாற்றம்

நவம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?