Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் இருந்து குறைப்பாடுகளுடன் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் தொடர்பில் சோதனைகள் ஆரம்பம்.

ஜூலை 24, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசுப் பேருந்துகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்குப் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் அனுமதி வழங்கப்பட்ட பேருந்துகளிலும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர் பரிசோதகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, மன்னார் – கற்பிட்டி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட பேருந்தில் அதிகார சபையின் திடீர் பரிசோதகர்கள் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த பேருந்து செல்லுபடியான வழித்தட அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன், பயணிகளுக்குப் பயணச்சீட்டுகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகார சபையால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டது. இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில், உரிய அனுமதி நிபந்தனைகளை மீறியமைக்காக குறித்த பேருந்துக்கு 20,000 ரூபா நிர்வாகத் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் வடக்கு மாகாணம் முழுவதும் மேலும் தீவிரப்படுத்தப்படும். அண்மைக் காலமாகச் சில சொகுசுப் பேருந்துகளின் சேவைகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் அதிகார சபைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறிப்பாக பேருந்தின் ஆசனங்களைச் சரிப்படுத்த முடியாத நிலை காணப்படுதல், ஆசனங்களில் மூட்டைப்பூச்சிக் கடிக்கு உள்ளான சம்பவங்கள் மற்றும் குளிரூட்டி (A/C) முறையாகச் செயற்படாமை போன்ற பல குறைபாடுகள் தொடர்பில் பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எனவே, பயணிகள் இத்தகைய சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது மேற்கண்டவாறான குறைபாடுகளையோ அல்லது முறைகேடுகளையோ எதிர்கொண்டால், அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குத் தமது முறைப்பாடுகளைத் தாமதமின்றி அனுப்பி வைக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்தி சுற்றுச்சூழலை அழித்து அபிவிருத்தியை அடைய முடியாது – ஆளுநர் நா.வேதநாயகன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

மே 2, 2025
இலங்கை

கரடியனாறு ,அம்பவத்தை பிரதேசங்களில் இரு குண்டுகள் மீட்பு.

பிப்ரவரி 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

டிசம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்

ஜூன் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?