Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் அமெரிக்க மதுபானங்களுக் கியூபெக்கான தடை, தங்களுக்குக் கடுமையான பொருளாதாரப் பேரழிவு – கலிபோர்னியா அரசியல்வாதிகள் கவலை

ஜூலை 10, 2026
படிக்க 2 நிமிடங்கள்
U.S. wines for sale at an SAQ depot in Montreal, Thursday, Feb. 12, 2026. The government of Quebec has allowed certain U.S. alcohol products to go back on sale with proceeds being donated to Food Banks of Quebec. THE CANADIAN PRESS/Graham Hughes
SHARE

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளுக்குப் (Tariffs) பதிலடியாகக் கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணம் விதித்துள்ள அமெரிக்க மதுபானங்களுக்கான தடை, தங்களுக்குக் கடுமையான பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண அரசியல்வாதிகள் மற்றும் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு கனேடியப் பொருட்களுக்கு விதித்த கடுமையான இறக்குமதி வரிகளுக்குப் பதிலடியாக, கியூபெக் மாகாணம் அமெரிக்க மதுபானங்களை முற்றாகப் புறக்கணிக்கும் (Boycott) அதிரடி நடவடிக்கையை எடுத்திருந்தது.

இத்தடையால் கலிபோர்னியாவின் திராட்சை மற்றும் ஒயின் உற்பத்தியாளர்கள் (Winegrowers) மிகக் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக அமெரிக்க செனட்டர் ஆடம் ஷிஃப் (Adam Schiff) சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், அமெரிக்கா தனது அநியாயமான வரிகளைத் திரும்பப் பெறாதவரை இந்தத் தடை நீங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரேஷெட் (Christine Fréchette) மிகக் கடுமையான தொனியில் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவின் மதுபானங்கள் மீதான கியூபெக்கின் இந்த தடை உத்தரவானது, அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான கலிபோர்னியாவின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் கலிபோர்னியாவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) உள்ளிட்ட 14 மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய இருகட்சி கூட்டுக்குழுவும், அதனைத் தொடர்ந்து செனட்டர் ஆடம் ஷிஃப்பும் கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் பிரேஷெட்டிற்கு அவசரக் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள இந்த வர்த்தகப் போரை (Tariff wars) கலிபோர்னியா மாகாணம் ஆதரிக்கவில்லை என்பதை கனேடிய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மதுபானங்கள் மீதான கியூபெக் அரசின் தடை காரணமாக, கியூபெக்கின் மதுபான நுகர்வோரும் கலிபோர்னிய மதுபான உற்பத்தியாளர்களுமே பாதிக்கப்படுவதாக, அக்கடிதங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனவே, கியூபெக் அரசானது அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கியூபெக் மதுபான நுகர்வோருக்கு அமெரிக்க ஒயின்கள் கிடைக்காததால், சுமார் 434 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு மாபெரும் வர்த்தகச் சந்தை முடங்கியுள்ளதாகவும் அமெரிக்கத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கலிபோனிய மாநிலப் பிரதிநிதிகளின் இந்தக் கோரிக்கையை கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் பிரேஷெட் முற்றாக நிராகரித்துள்ளார். தற்போது நடந்து வரும் வர்த்தகப் போரில், கியூபெக்கின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் தமது அரசு உறுதியாக உள்ளதாக, அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொண்ட்ரியல் கிழக்கில் கொக்கெய்ன் விநியோக வலையமைப்பு காவல்துறையால் முறியடிப்பு
அடுத்த செய்தி சிறுவர்களிடம் பாலியல் சேவை பெறுவோருக்கு 6 மாத சிறை கட்டாயம்: கனேடிய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ட்ரம்ப் – புட்டின் இடையே இன்று விசேட பேச்சுவார்த்தை!

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு ஆரையம்பதி விபத்தில் மூன்று குழந்தை உயிரிழப்பு – சாரதி கைது

ஜூன் 30, 2025
கியூபெக்

பதவியை இராஜினாமா செய்யும் கியூபெக் மாநில பிரதிநிதி அலெக்சாண்டர் பூலரிஸ்

ஏப்ரல் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

நவம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?