வெல்லவாய தனமல்வில பிரதான வீதியின், ஊவா குடா ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல விஹாராஸ்தானத்திற்கு அருகில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி இரண்டு லொறிகள் மோதிய விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்ததாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து தெரிய வருகையில்,
சீமெந்து ஏற்றி சென்ற லொறியின் பின்புறத்தில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் லொறி மோதியமையால் விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

