Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்

ஜூன் 30, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (30) 30-6-2026 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சிஐடியினர் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அதேவேளை அனுரவின் வாயை போல பொய் குற்றச்சாட்டு என பிள்ளையான் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த 2025 ஏப்ரல் 7ம் திகதி சிஐடி யினர் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு பிள்ளையான் உட்பட 3 பேரையும் அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்

இதன் போது வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட போது பிள்ளையான் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் பிள்ளையானுக்கு எதிராக சிஜடி யினர் தொடரப்பட்ட வழக்கு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் கடந்த 2015ம் திகதி மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு அவரை மட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்.

தற்போது வெலிசறை கடற்படை சிறையில் சிறை கைதிகளுக்கான உரிமைகள் வழங்கப்படுகிறது என சந்தேகிப்பதாகவும் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர் எனவே அவரின் நலன் கொண்டு அவரை மட்டு சிறைச்சாலையில் வைக்குமாறு நீதவானிடம் கோரினர்.

இதேவேளை சந்தேக நபரான முகமட் சகீத் தனக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு நேரம் கேட்டதை அடுத்து நீதவான் வாக்கு மூலத்தை வழங்குமாறு தெரிவித்து 3 பேரையும் எதிர்வரும் 13 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், பிள்ளையானுக்கு எதிராக கடந்த 2024 ம் ஆண்டு கல்லடி பாலத்திற்கு அருகில் தனியார் காணியில் உள்நுழைந்து வேலிகளை பிடுங்கிய சம்பவம் தொடர்பான வழக்கை எதிர்வரும் ஜப்பசி மாதம் 19 ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை பிள்ளையானை நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதையிட்டு நீதிமன்றத்துக்கு செல்லும் ஒவ்வொருவரையும் பொலிசார் தீவிர சோதனை செய்து கொண்டதுடன் நீதிமன்ற கட்டிடத் தொகுதியை சுற்றி பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் பிள்ளையானை காண்பதற்காக அவருடைய கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் நீதிமன்றத்துக்குள் வந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி புதிய கடற்படை தளபதியாக டேமியன் பெர்னாண்டோ நியமனம்
அடுத்த செய்தி செனன் பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

குருந்தூர் மலையில் கைதாகிய இரண்டு விவசாயிகளும் விடுவிப்பு!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு

பிப்ரவரி 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தெஹிவளை தேசிய மிருகசாட்சி சாலையில் பிறந்த சிங்க குட்டிகளுக்கு பெயர் சூட்ட தீர்மானம்

மே 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?