Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா வடக்கு கல்வி வலய பாடசாலைகள் மாகாண மட்டத்தில் சாதனை

ஜூன் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள், 2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட “செயற்பட்டு மகிழ்வோம்” போட்டிகளில் பங்குபற்றி பாரிய சாதனைகளை நிலைநாட்டியுள்ளன.

தரம் 3, 4 , 5 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வலயத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டி முடிவுகளின்படி, தரம் 3க்கான ஆண்கள் பிரிவில்
வ/புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம் மாகாண மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. அதே பிரிவில் பெண்கள் பிரிவிலும் வ/புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், கலவன் பிரிவில் வ/கிடாச்சூரி கருவே. அ.த.க.பாடசாலை இரண்டாமிடத்தைச் சுவீகரித்துக் கொண்டது.

தரம் 4க்கான போட்டிகளில், ஆண்கள் பிரிவில் வ/புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயமும், பெண்கள் பிரிவில் வ/தரணிக்குளம் ஆரம்பப் பாடசாலையும் இரண்டாமிடங்களைப் பெற்றுக்கொண்டன.

அத்துடன், கலவன் பிரிவில் போட்டியிட்ட வ/நொச்சிமோட்டை க. உ. வித்தியாலயம் மூன்றாமிடத்தைப் பெற்று வலயத்தின் வெற்றிப் பட்டியலை அலங்கரித்துள்ளது.

மேலும், தரம் 5க்கான போட்டி முடிவுகளில் வ/புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலுமே இரண்டாமிடங்களை தமதாக்கிக் கொண்டது.

இதேவேளை, கலவன் பிரிவில் போட்டியிட்ட வ/சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயம் மாகாண மட்டத்தில் மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

நடைபெற்று முடிந்த இப்போட்டிகளில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வ/புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம் அதிகளவான வெற்றிகளைப் பெற்று விசேட பாராட்டுக்களைப் பெற்றுள்ளதுடன், மாகாண மட்டத்தில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் – கடற்தொழில் அமைச்சர்
அடுத்த செய்தி தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பொலிகண்டியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தீ!

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கிண்ண கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலக முடிவு

மார்ச் 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

போதை மாத்திரைகளுடன் கைதான பாடசாலை மாணவர்கள்

நவம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம்

ஜூலை 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?