Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் பிரெஞ்சு மொழித் திணிப்புச் சட்டங்களுக்கு மத்தியில், போராடுகிறார் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான ஆணையர்!

ஜூன் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உத்தியோகபூர்வ மொழிகளுக்கான புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கெல்லி பர்க் (Kelly Burke), கியூபெக்கில் வாழும் ஆங்கிலம் பேசும் சிறுபான்மைச் சமூகத்தினரின் (Anglophones) சட்டப்பூர்வ மொழி உரிமைகளைப் பாதுகாப்பதில் மிகக் கடுமையான சவால்களையும், உள்ளூர் அமைப்புகளின் தீவிரமான எதிர்பார்ப்புகளையும் எதிர்கொண்டுள்ளார். கியூபெக் அரசின் தீவிர பிரெஞ்சு மொழித் திணிப்புச் சட்டங்களுக்கு மத்தியில், இந்த நியமனம் மாகாண அரசியலில் பெரிதும் அவதானிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் செனட் சபையின் ஒப்புதலுடன் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான 8 ஆவது ஆணையராகக் கெல்லி பர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் ஆளும் CAQ கட்சி அரசாங்கம் கொண்டுவந்துள்ள “மசோதா 96″ மற்றும்”மசோதா 40” ஆகியவற்றால் கியூபெக் ஆங்கிலேயர்களின் கல்வி, மருத்துவம் மற்றும் அரச சேவை உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் இக்கட்டான சூழலில் இவர் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான ஆணையராக பதவியேற்றுள்ளார்.

எனவே, இவர் வெறும் மத்திய அரசு விதிகளுக்கு மட்டும் கட்டுப்படாமல், கியூபெக் ஆங்கிலேயர்களின் கள யதார்த்தப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் மத்திய அரசு சார்பில் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூபெக் சிறுபான்மையின உரிமை அமைப்புகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

முன்னாள் ஒன்ராறியோ பிரெஞ்சு மொழிச் சேவைகள் ஆணையராக (French Language Services Commissioner) இருந்த கெல்லி பர்க், ஒன்ராறியோ மாகாணத்தில் வாழும் பிரெஞ்சு சிறுபான்மையினரை (Franco-Ontarians) பாதுகாத்த நீண்ட அனுபவம் கொண்டவர் ஆவார். கியூபெக்கில் உள்ள ஆங்கில மொழி உரிமைகளுக்கான கூட்டமைப்பு புதிய ஆணையருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அதேவேளை, மாகாணத்தில் ஆங்கில வழிப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் தன்னாட்சி
அதிகாரத்தை ஆளும் அரசு சிதைப்பதை எதிர்த்து அவர் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

முந்தைய செய்தி கூகுள் நிறுவனத்தின் பணிப்பாளர் இராஜினாமா
அடுத்த செய்தி மொண்ட்ரியல் வடக்குப் பகுதியில் 3 வாகனங்கள் திட்டமிட்டுத் தீக்கிரை – பொலிஸார் தீவிர விசாரணை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தீயில் எரிந்த நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு

ஜூலை 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

செப்டம்பர் 22, 2025
கியூபெக்

சிறுவர்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்த முயன்ற நபர் கைது

ஏப்ரல் 24, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 2 மே 2025

மே 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?