பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை தென்னிந்திய தமிழ் சினிமாவின் இயக்குனர் தங்கர் பச்சான் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது மலையக மக்கள் குறித்த ஒரு திரைப்படத்தை தாம் எடுக்க விரும்புவதாக அமைச்சரிடம் கூறியுள்ளார்.
இதில் மலையக மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்கள் வரலாற்றை மையப்படுத்தி எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த திரைப்படத்தில் மலையகத்தை சார்ந்த கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறியுள்ளதோடு, பிரதி அமைச்சரும் இப்படத்திற்கு முழு ஆதரவையும் தருவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
