நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் கடும் காற்று வீசக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பின்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், நாளை பிற்பகல் 3.30 வரை அமுலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்த்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீச்சாக கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மணித்தியாலத்திற்கு 30 தொடக்கம் 40 வரையான கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என அத்திணைக்களம் கூறியுள்ளது.
