நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்றமையால் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கையானது கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையானது நுவரெலியா, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்சரிவு தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
