இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் “அழகிய தீவு புன்னகைக்கும் மக்கள்” எனும் கருப்பொருளில் கிளீன் சிறிலங்கா (Clean Sri Lanka) நிகழ்ச்சித் திட்டம் இன்றைய தினம் (23) சனிக்கிழமை மன்னார் மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கு அமைவாக முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரிப்பு அல்லிராணி கோட்டை சார்ந்த பகுதிகளில் விசேட நிகழ்வு இடம்பெற்றது.
இராணுவத்தின் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தின் 542 வது படைப் பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல் ரிதிமாலியத்த தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் உற்பட திணைக்கள தலைவர்கள், இராணுவத்தினர் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது குறித்த பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கழிவு பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
