திருகோணமலை அம்பேபுஸ்ஸ பிரதான வீதியின் தம்பலகமுவ பொலிஸ் பகுதியில் நேற்றையதினம் (17) விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
லொறியொன்று சைக்கிள் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த 78 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேட்க் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
