நாட்டில் தற்போது சீரற்ற வானிலை நிலவுவதால் இடி மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி இடி மின்னல் ஏட்படும் போது வெளியில் செல்வதை தவிர்ப்பதோடு, பாதுகாப்பான இடங்களில் வசிக்குமாறு வானிலை ஆய்வாளர் கலாநிதி சசிந்த ஜெயசேகர அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த மாதிரியான காலப்பகுதியில் வாகனங்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் மூடிய வாகனத்தில் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இடி மின்னலின் போது தொழிநுட்ப சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
