அண்மையில் திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது
குறித்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலரானது சைபர் தாக்குதலினால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி பிட்பகல் 2 மணிக்கு திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, நிதி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் பொது நிதிய பற்றியக் குழுவில் முன்னிலையாகுமாறு பொது நிதிக் குழுவின் தலைவரான ஹர்ஷ டி சில்வா இதை அறிவித்துள்ளார்.
