ஈரானுக்கு எதிராகக் கடல்சார் முற்றுகையை அமுல்படுத்தும் திறன் அமெரிக்காவிற்கு இல்லை என்று ஈரானின் நீதித்துறைத் தலைவர் கோலம்ஹொசைன் மொஹ்சேனி எஜேய் தெரிவித்துள்ளார்.
“ஈரான் மீது கடல்சார் முற்றுகையை விதிக்கும் வல்லமை தங்களுக்கு இல்லை என்பதை அமெரிக்கர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறிய அவர், பாரசீக வளைகுடாவில் முன்னொரு காலத்தில் தோல்வியடைந்த அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் மீண்டும் நிகழக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஈரானின் தெற்குத் துறைமுகங்கள் மீதான கடல்சார் முற்றுகை இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறிவரும் நிலையில், ஈரானிடமிருந்து இந்த வலுவான பதில் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
