கொழும்பு நோக்கி சென்றுக் கொண்டிருந்த சாகரிகா ரயில் இன்று மாலை 6.20 மணியளவில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரயில் கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றையதினம் (24) தடம் புரண்டது.
இதற்கமைய கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தைக்கு இடையில் தற்போது ஒரு வழித்தடத்தில் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை தடம் புரண்டிருந்த சாகரிகா ரயில், சீர்செய்யப்பட்டு மீண்டும் கொழும்பு நோக்கி சென்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
