Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

உயர்தரத்தில் சாதனை: முல்லைத்தீவு மகாவித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த 31 மாணவர்கள் கௌரவிப்பு.

ஏப்ரல் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் 31 பேர் கடந்த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் வித்தியாலயத்தின் அதிபர் திரு மோகனஜீவன் தலைமையில் நேற்றைய தினம்(22) காலை 8.00 மணிக்கு முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.தமிழ்மாறன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

கடந்த உயர்தரப் பெறுபேற்றில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவி மிஸ்ராஜ் நிதா பாத்திமா விஞ்ஞானப் பிரிவில் தேசிய ரீதியில் அதி விசேட சித்தியும் மாவட்ட ரீதியில் முதல் நிலையும் பெற்று வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். அதேபோல் வர்த்தகப் பிரிவில் அன்ரனிற்ரா நிலுஜினி என்ற மாணவி மாவட்ட ரீதியில் முதல் நிலையினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு விருந்தினர்களால் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு முதல்நிலை பெற்ற மாணவிகள் இருவருக்கும் மக்கள் வங்கி கிளையினால் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு செல்லும் போது முல்லைத்தீவு மகாவித்தியாலய அனைத்துலக பழைய மாணவர்கள் சங்கத்தினால் நிதி உதவியும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய இந்த நிகழ்வில் முல்லை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரி, பழைய மாணவ சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.

முந்தைய செய்தி யாழில்.சீமானுக்கு ஆதரவாக மாட்டுவண்டியில் புறப்பட்ட இளைஞர்கள்
அடுத்த செய்தி ஒண்டாரியோ அரசால் வாங்கப்பட்ட சொகுசு விமானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்களின் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.

மார்ச் 3, 2025
இலங்கை

வடமாகாணத்திற்கு 750 கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் அன்பளிப்பு

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்உலகம்

சீன பட்டாசு விற்பனை நிலையத்தில் வெடி விபத்து – 12 பேர் உயிரிழப்பு

பிப்ரவரி 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகைக்கு குரல் கொடுக்க வேண்டும் – என்.எம்.ஆலம்

பிப்ரவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?