நாட்டில் மழையுடனான காலநிலை நிலவுவதால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணியிலிருந்து நாளை மாலை 4 மணி வரைக்கும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர, கேகாலை மாவட்டத்தில் வரகாபொல,ரம்புக்கனை, கேகாலை ஆகிய இடங்களுக்கு இவ்வெச்சரிக்கிற் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் அம்பகமுவ, நுவரெலியா ஆகிய இடங்களிளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, ஓப்பநாயக்க, பெல்மதுளை, குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
