தற்போதைய காலப்பகுதியில் அதிக வாகனங்கள் பயணிப்பதால் வீதி விதிமுறைகளை பின்பற்றாது செல்லும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதன்படி வீதி விதி மீறல்கள் தொடர்பில் அறிவிக்க 070 475 5600 புதிய இலக்கமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு இன்று முதல் இந்த விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்குமான ஒத்துழைப்பை வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
சாரதிகள் மதுபோதையில் வாகனம் செலுத்தல், அதிக வேகம் மற்றும் அபாயகரமான முறையில் முந்திச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
