Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வெடுக்குநாறி விவகாரம் – இனங்களுக்கிடையே அவ நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைய கூடாது

ஏப்ரல் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெடுக்குனாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் இனங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாடுகளையும் நமிக்கையீனத்தையும் உருவாக்கும் விவகாரமாக இருக்கின்றது. எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிக கவனம் செலுத்தி தீர்வை கொடுப்பது அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிலப்பரபுக்கள் பௌத்த சமயத்துக்குரியது என்றும் அந்நிலங்களை எல்லையிட்டு விரைவில் வர்த்தமானி அறிவிப்பு செய்யவுள்ளதாகவும் துறைசார் அமைச்சர் நாடாளுமன்றில் அறிவித்து நிலையில் தமிழ் மக்களிடையே அது பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

அந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே டக்ளஸ் தேவானந்தா அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி மலையில் பௌத்த சமயத்துடன் தொடர்புடைய சான்றுகள் அதிகமாக இருப்பதாகவும் அதனடிப்படையில் அந்நிலங்களை பௌத்த சமயத்திற்கானதாக அடையாளமிட்டு வர்த்தமானி அறிவிப்பை அறிவிக்கவுள்ளதாகவும் துறைசார் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த அமைச்சரின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இது இனங்களுக்கிடையில் உண்மையை மறைப்பதாகவும் குறிப்பாக வரலாற்றை மறைப்பதாகவும், இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக அமையும் என்றுதான் நாம் நினைக்கின்றோம்.

முன்பு நாம் ஆட்சியில் இருந்தபோது வர்த்தமானி வெளியிடும் செயற்பாட்டை முன்னெடுக்காத வகையில் கையாண்டு ஒரு சுமூக நிலைக்கு கொண்டு வந்திருந்தோம்.

ஆனால் துரதிஸ்டவசமாக இன்றைய நிலமை அதை முற்றாக மாற்றியமைக்கதாக இருக்கின்றது.

அந்த வகையில் இவ்விடயத்தின் உண்மை நிலையை விளக்கி எவ்வாறான நடவடிக்கை எடுப்பதனூடாக இனங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்ற கருத்தை உள்கடக்கி அனுர ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்ப இருக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை
அடுத்த செய்தி கியூபெக்கில் போத்தல் மற்றும் டின் திருப்பிச் செலுத்தும் முறையில் பெரிய மாற்றம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

உர மானியத்தை டிஜிட்டல் முறையில் வழங்க நடவடிக்கை!

ஆகஸ்ட் 19, 2025
இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 தமிழக மீனவர்கள் கைது!

டிசம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி பிரதேசத்தில் கடும் மழையால் வெள்ளம்…

ஏப்ரல் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையம்

ஜனவரி 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?