Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை

ஏப்ரல் 11, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து , காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் , கடற்தொழில் அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , நிலஅளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர்,ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்கள் கடந்த காலங்களில் கொழும்பில் நடைபெற்றது. நீதி அமைச்சர், புத்தசாசன அமைச்சர் , மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர் உள்ளிட்ட தரப்பினருடன் நானும் இணைந்து கலந்துரையாடல்களில் பங்கேற்று , காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

அதன் அடிப்படையில் தற்போது வரையில் 17 காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு , அவர்களின் உறுதிகளை உறுதிப்படுத்தியுள்ளோம்.

அதன் அடிப்படையில் தற்போது காணி உரிமையாளர்கள் தமது காணி எல்லைகளை அடையாளப்படுத்தி , காணிகளை அளவீடு செய்வதன் ஊடாக அவர்களுக்குரிய காணிகளை அவர்களுக்கு வழங்க முடியும் என்பதால் எதிர்வரும் 17ஆம் திகதி காணிகளை அளவீடு செய்யும் பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.

காணி உரிமையாளர்கள் தமது காணிகளை அளவீடு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கி , தமது காணிகளின் எல்லைகளை அடையாளம் காட்டினால் அந்த காணிகளை அளவீடு செய்து , காணி வரைபடங்களை கீறி , அந்த காணி உரிமையாளர்களிடமே காணிகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

காணி அளவீட்டு பணிகள் முடிவடைந்து காணிகள் அடையாளம் காணப்பட்டு , அதன் உரிமையாளர்களை உறுதி செய்தவுடன் காணிகளை அவர்களிடம் மிக மிக விரைவில் கையளிப்போம் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி மொன்றியலில் கொத்ரேகூர் துறைமுக விரிவாக்கப் பணிகளை ஆரம்பித்து வைத்த பிரதமர் கார்னி
அடுத்த செய்தி வெடுக்குநாறி விவகாரம் – இனங்களுக்கிடையே அவ நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைய கூடாது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வத்தேகமயில் பஸ் விபத்து!

ஜூலை 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலை 40ஆவது பட்டமளிப்பு விழா

பிப்ரவரி 19, 2026
இலங்கை

பருத்தித்துறையில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி ஆபத்தான நிலையில்!

நவம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்ட்ரியல் நகரின் முன்னாள் செயற்குழுத் தலைவர் மீது விசாரணை!

மே 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?