நாட்டில் பல இடங்களில் வறட்சியான ஒரு காலநிலை நிலவுகின்றது. இந்நிலையில் மலையகம் சார் பகுதிகளில் வறட்சி அதிகரித்துள்ளதோடு, தனியார் நிலமொன்றிற்கு தீ வைக்கும் விஷம செயலும் அரங்கேறியுள்ளது.
இதன்படி ஹட்டன் மண்டல கல்வி அலுவலகத்திற்கு பின்னால் உள்ள தனியார் நிலத்திலே இன்று பிற்பகல் 1 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தீயை கட்டுக்குள் கொண்டு வருவதட்காக ஹட்டன் காவல்துறை அதிகாரிகளும், ஹட்டன் டிக்கோயா நகரசபை ஊழியர்களும் போராடி தீயை அணைத்துள்ளனர்.
இவ்வாறான தீ சம்பவத்தால் சுற்றுசூழல், வனவிலங்குகள் மற்றும் மனித குடியிருப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
