நாட்டில் எரிபொருள் விற்பனை தொடர்பில் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
இங்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமாரகே தெரிவித்துள்ளார்.
இதன்படி சுற்றுலா பயணிகள் தங்களின் கடவுசீட்டுகள் அல்லது உரிய அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்பபடுத்தும் நோக்கில் இந்த நடைமுறை பின்பற்றவுள்ளது.
மேலும் இது தொடர்பான விபரங்களை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
