நுனாவுட் (Nunavut) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லோரி இட்லூட் (Lori Lori Idlout), தனது சொந்த வணிக நிறுவனத்தில் பொருட்கள் வாங்கிவிட்டு அதற்கு அரசுப் பணத்தைச் செலவிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, சுமார் 1,756 டொலர் பணத்தை அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திருப்பிச் செலுத்தியுள்ளார்.
லோரி இட்லூட் ‘கார்விங்ஸ் நுனாவுட்’ (Carvings Nunavut) என்ற கலைப்பொருள் காட்சியகத்தின் உரிமையாளர் ஆவார்.
2025-ஆம் ஆண்டில் நான்கு முறை தனது சொந்தக் கடையிலிருந்தே கலைப்பொருட்களை வாங்கி, அதற்கான செலவை நாடாளுமன்றக் கணக்கில் (Expenses) அவர் காட்டியுள்ளார்.
“அரசு ரீதியான பரிசுகள்” என்ற பெயரில் இந்தப் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியைப் பயன்படுத்தி சொந்த வியாபாரத்தில் லாபம் ஈட்டுவது சட்டப்படித் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அவர் என்.டி.பி (NDP) கட்சியிலிருந்து விலகி, பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) தலைமையிலான லிபரல் கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையிலேயே, அரசுப் பணத்தை தவறாகச் செலவிட்டமை குறித்த இந்த சர்ச்சை வெடித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
