நாட்டில் போதைப்பொருள் தொடர்பான கைது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இதன்படி இலங்கை கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளையும், மன்னார் குற்ற புலனாய்வு பிரிவு பணியகமும் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்திருந்தது.
குறித்த தேடுதல் நடவடிக்கையில் புத்தளம் சாலியவெவ பகுதியை சேர்ந்த 37 வயதான சந்தேக நபர் ஒருவர் 2 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் சாலியவெவ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளும் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
